காவல்துறை சார்பில் வாகன பரிசோதனை
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பலவித தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையில் நேரம் விதிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் மருத்துவ அவசரம் இறுதிச் சடங்கு மற்றும் அவசர காரணங்களுக்காக வெளியில் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் தகுந்த ஆவணம் காண்பித்து சென்றனர். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியம் இன்றி வெளியில் செல்லும் வாகனங்களை செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் சங்கர் நகர் S-6 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் மெயின் சாலையில் காவல்துறை சார்பில் வாகனச் சோதனை நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் மகுதீஸ்வரீ உத்தரவுப்படி உதவி காவல் ஆய்வாளர் எட்வர்ட் தலைமையில் காவலர்கள் இருசக்கர வாகனங்களில் வருவோருக்கும் அத்தியாவசியம் இன்றி வெளியில் சுற்றும் வாகனங்களுக்கு அபராதம் ரூ,200/- விதித்தனர் .
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்