தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றவர்களை பாராட்டிய டிஎஸ்பி

✍கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நேற்று (04.05.2021) தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

இதில், குளத்தூர் டாஸ்மார்க் கடை ஊழியரை வழிமறித்து ரூ.6,13,220/- பணத்தை வழிப்பறி செய்த 3 பேரை கைது செய்த தனிப்படையினருக்கும் மற்றும் தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கும் நேற்று (04.05.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். பரிசு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் இன்று (05.05.2021) சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பரிசு பெற்றவர்களை பாராட்டினார்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஜீவா திருப்பூர் எம்எல்ஏ விஜயகுமார் அவர்களை 33வது பார்டர் மாணிக்கம் அவர்கள் அவர் கட்சி சார்பாக அனைவரும் சென்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட போது எடுத்த படம் தமிழ்மலர் குருநாதன்