கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ள அதே வேளையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அன்றைய தினம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் திறக்கப்படவில்லை.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியுள்ளது. போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். .
தமிழ் மலர்
மின்னிதழ்.
செய்தியாளர்.தமீம்அன்சாரி..