என்ன தான் நாணமிது செய்கின்ற தொல்லை !

என்ன தான்
நாணமிது
செய்கின்ற

தொல்லை !

பாவம் வாளாவிருந்தாள்
பதட்டமாய் இருக்கிறாள் !

யுவதியின் அவதிகள்
யுத்தகளமாய் !

நிலை கொள்ளா
நிமிடங்கள் !

பகலவன் காயும் நிலா !

எண்ணங்கள்
ஏணிப்படிகளாய் !

ஏன் இப்படி ?

அவளுள் தெளிந்த விடை இருந்தும்
இயல்பு நிலைக்கு தடா !

நாணத்தால் நினைவுகளில்
ஸ்திரத் தன்மையின்றி
தன் ஸ்பரிசத்தை தானே அணைத்துக் கொள்கிறாள் !

எண்ணங்களின்
சீற்றம் சிறிதும் குறையவில்லை !

என்ன தான் நாணமிது செய்கின்ற தொல்லை !

காததோரம் என்
காதலைச் சொன்னேன் !

தொகுப்பு ஹயாத் 

தமிழ்மலர் மின்னிதழ்