மே 3 தேதி நடைபெறவிருந்த மொழிப்பாட தேர்வு 31 ஆம் தேதி நடைபெறும்

தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வு திட்டமிட்ட படி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்தன. 

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் 31 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதர தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் தேர்வுகள் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்