ஆரம்ப கல்வி மற்றும் உயர் கல்வி தரும் ஜாதக அமைப்பு
ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் பாவம் வலிமைபெற்றால் ஆரம்பநிலைக் கல்வி பள்ளிப்படிப்பு நன்றாக அமையும்.
நான்காம் பாவம் வலிமைப்பெற்றால் பட்டப்படிப்பு கண்டிப்பாக நல்லபடி பூர்த்தி செய்து பட்டம் வாங்கிடுவார்.
ஒன்பதாம் பாவம் வலிமை பெற்றால் உயர்கல்வி டாக்டரேட் பட்டம் வாங்க வாய்ப்புள்ளவர்.
புதனும், குருவும் வலிமை பெற்றால் படிக்காத மேதை. கல்லூரியில் சென்று படிக்காவிட்டாலும் சுயமாக படித்து அறிவைப் பெறுவார்கள்.
5ஆம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும். மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.
மறைந்த புதன் நிறைந்த கல்வி. புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல் நன்றாக இருக்கும். புதன் ராசி, அம்சம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சில ஜாதகங்களில் புதன் நிலை சற்று குறைந்தாலும், மறைந்தாலும் வேறு சில அமைப்பினால் உயர்கல்வி யோகம் வரும். பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கணினி அறிவு என அனைத்திலும் ஜொலிக்க முடியும். மறைந்த புதன் நிறைந்த கல்வியைத் தருவார்.
பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம் இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள்
அமையாமல் 4ம் அதிபதி
வலு இழக்காமல் இருந்து
5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனை செய்வார்கள்.
5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4, 5 ம் அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்வார்கள்.
2, 4, 5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது. அப்படி பாவ கிரகங்களால் சூழப்பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும். குறிப்பாக, சர்பகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஆகிய கிரகங்கள் மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும்.
அதுவும் ராகு அல்லது கேதுவின் திசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகிறது.
விநாயகரையும், அம்மனையும் வழிபட தடைகள் நீங்கும்.
ஜோதிட ஆய்வில்
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்