கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை எடப்பாடி பழனிசாமி நேற்று செலுத்திக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சேலம் அரசு மருத்துவமனையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “ தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதுமான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்