வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையின்கீழ் 6 உறுப்பினர்களை கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகிறது.

இந்த கமிட்டி, கடந்த ஆண்டு (2020) மார்ச் மற்றும் மே மாதங்களில் வங்கி கடன் வட்டி விகிதத்தை 1.15 சதவீதம் குறைத்தது. எனவே இந்த வட்டி விகிதங்கள் முறையே 4 சதவீதம் மற்றும் 3.35 சதவீதமாக இருந்தது.

அதன்பிறகு ஆகஸ்டு, டிசம்பர் மாதங்களில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பழைய வட்டி விகிதங்களே நீடித்தன. இந்த நிலையில் நேற்றும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றவில்லை.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்