80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு இலவச வாகன வசதி

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு இலவச வாகன வசதி செய்துத் தரப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உதவும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தள்ளது.

அந்த வகையில், வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை, திருச்சி மற்றும் கோவையில் இலவச வாகன வசதி செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணம் செய்ய விரும்பும் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச சேவையை பெற, தங்கள் செல்போனில் உள்ள UBER நிறுவனத்தின் APP-ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்ய கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்துள்ள UBER நிறுவனம் இலவச சவாரி வழங்க முன்வந்துள்ளது.

மேலும் இந்த சேவைக்கு முன்பதிவு செய்யலாம் எனவும், 5 கிலோமீட்டர் வரை 200 ரூபாய் வரையுள்ள கட்டணத்தை தேர்தல் ஆணையமே செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருத்து எழுந்துள்ளது.

ரவூப் தலைமை செய்தியாளர்

தமிழ்மலர் மின்னிதழ்