காதல் திருமணம், திருமண பொருத்தம் மற்றும் தோஷங்கள்:
காதல் திருமணம்
குறிப்பாகக் கா தல் திருமணத்தைப் பற்றி ஆராயும் போது 5, 7ம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனென்றால் மனத்தில் ஏற்படக் கூடிய ஈர்ப்புத் தன்மையைக்
குறிப்பது 5ம் இடமாகும்.
களத்திர ஸ்தானமான 7ம் இடம் திருமணத்தைக் குறிக்கக் கூடியதாகும். 5, 7க்குரிய அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தத்துடனிருந்தால், மனதளவில் ஈர்ப்புத் தன்மை உண்டாகிக் காதல் கைகூடித் திருமணத்தில் முடிகிறது. ஆக 5, 7க்கு அதிபதிகள் இணைவது, பார்த்துக்கொள்வது, பரிவர்த்தனை பெறுவது, காதல் திருமணத்தை ஏற்படுத்தும். இது போல் காதல் திருமணத்தை ஏற்படுத்தும் விதிகளை ஆய்வு செய்தால், திருமணத்தின் போது ஏற்படும் பல தடைகளை முன்னரே அறிந்து பிரச்னையை தடுக்கலாம்
செவ்வாய் தோஷ பொருத்தம்
இதனை லக்கினத்திலிருந்து , சந்திரனிலிருந்து (ராசியிலிருந்து) மற்றும் சுக்கிரனிலிருந்து 1, 2, 4, 7, 8 12 இல் செவ்வாய் இருப்பின் தோஷம்.
இதில் கடுமையும் உண்டு. இதற்குப் பல விதி விலக்குகள் உண்டு. இதனை 30 வயதிற்கு பிறகும், இரண்டாம் திருமணத்திற்கும் பார்ப்பது அவசியமாகாது.
ஷஷ்டாஷ்டக பொருத்தம்
பெண்ணின் லக்கினத்திலிருந்தும், ராசியிலிருந்து இதனைக் காணவேண்டும். பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி 6 ஆகவோ அல்லது
8 ஆகவோ இருக்கக்கூடாது. இதுவும் தம்பதியினரைப் பிரிக்கக்கூடும்.
ஆபத்தான தசை சந்திப்பு உண்டா / இல்லையா எனக் காணல்
இதைத் திருமணம் நடைபெறுவதிலிருந்து சுமார் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலும் காணுதல் அவசியமாகிறது. இருவருக்கும் பாதகாதிபதியின் தசையா, அஷ்டமாதிபதியின் தசையா அல்லது ரோகாதிபதியின் தசையா என காண்பது. திருமணம் ஆனவுடன், உடனடியாக பிரச்னையை எதிர்கொள்ளாதிருத்தலே இதன் முக்கியமாகும்.
கணவன்
திருமணத்திற்கு பிறகு வாழ பயப்படுபவரின் ஜாதகம்
மனைவியிடையே, வாழ்ந்து கழிப்பது என்பது வேறு, வாழ மறுப்பது என்பது வேறு, வாழப் பயப்படுவது என்பது வேறு. ஒருவரின் ஜாதகத்தில் மனோகாரகரான சந்திரன், புத்தி காரகரான புதன், ஆத்ம காரகரான சூரியன், ஆத்மாவின் பிரதிநிதியாகிய லக்கினம் உள்ள ராசியில், இன்னொருவரின் ஜாதகத்தில், செவ்வாய், ராகு, கேது இருந்தால், ஒருவருக்கு மற்றவர் மேல் பயம் ஏற்படும். ஒருவரின் 5ஆம் அதிபதி உள்ள ராசியில் இன்னொருவருக்கு ராகு, கேது இருந்தாலும் ஒருவருக்கு மற்றவர் மேல் காரணம் தெரியாத பயம் இருக்கும். ஏனெனில், 5ஆம் இடம் உணர்ச்சியைத் தூண்டும் ஈர்ப்புத் தன்மை கொண்ட இடம் ஆகும்.
பொதுவான மற்றும் முக்கியமானதோஷப் பரிகாரம்
எந்தவித தோஷமாக இருப்பினும், சிவனை அதுவும் பிரதோஷ சிவனை வணங்குவதென்பது அனைத்து தோஷங்களைப் போக்க உதவும் சரியான பரிகாரம் ஆகும்.
ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912