“தங்கச்சுரங்கம்”

1969 ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில்  உருவான   “தங்கச்சுரங்கம்”திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 52 ஆண்டுகள் நிறைவடைகின்றது.பாரதி,வெண்ணிற ஆடை நிர்மலா,ஓ.ஏ.கே.தேவர்,வரலட்சுமி,ஜாவர் சீதாராமன்,நாகேஷ்,முத்தையா, ஆர்.எஸ்.மனோகர்,மேஜர் சுந்தரராஜன் போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படத்தின் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா, இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி,இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 127 படம்.இப்படத்தில் சிவாஜி கணேசன் ஜேம்ஸ் போன்ட் பாத்திரமாக நடித்திருப்பார்.
போலித்தங்கம் தயாரிக்கும் ஓர் கள்வர் கோஷ்டியை சிஐடி இன்ஸ்பெக்டர் சிவாஜி  கண்டு பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பதாக திரைக்கதை. கதைப்படி சிவாஜியின் தந்தை ஓ.ஏ.கே.தேவர் தான் இக்கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்,கடமை தவறாத பொலீஸ் அதிகாரி சிவாஜி கணேசனுக்கும்,கொள்ளையர் தலைவன் தந்தை ஓ.ஏ.கே. தேவருக்கும் இடையிலான கடமையா..?பாசமா..?என திரையில் காட்டிய விதம் அற்புதம்.இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவன:சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள்,நான பிறந்த நாட்டிற்கு,கட்டழகு பாப்பா கண்ணுக்கு,ஓ நதியே மதுவானால் போன்றன.சிறந்த ஓர் பொழுதுபோக்கு சித்திரம் “தங்கச்சுரங்கம்”.இப்படத்தில் சிவாஜி கணேசன் 18 வயது வாலிபன் போல் மிக அழகாக இருப்பார்.


ஆக்கம். எஸ்.கணேசன் ஆச்சாரி

சதீஷ் கம்பளைஇலங்கை.