புதிய அலுவலகம் திறப்பு விழா!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்மலர் மின்னிதழ்
புதிய அலுவலகம் திறப்பு விழா!

நேற்று மார்ச் 26-ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல்துறை உயர் அதிகாரி ஆத்மநாதன், டிஎஸ்பி அவர்கள் தலைமையில் தமிழ்மலர் மின்னிதழ் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு அறிவழகன் முன்னிலை வகித்தார்.
கொடைக்கானல் தலைமை செய்தி ஆசிரியர் ரமேஷ், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.
இந்த விழாவிற்கு, சென்னை மாநகர தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் மற்றும் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ், இணையாசிரியர் செந்தில்நாதன், தலைமை நிர்வாகிகள் நாகம்மா, செல்லதுரை, சுமதி, தலைமை செய்தியாளர்கள் தீபன், செந்தில்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் சுதாகர், மருதமுத்து, விஜய்ராஜ், அரவிந்த் குமார், சக்திவேல், ஐயப்பன், வீரகுமார், கலைவேந்தன் மற்றும் நிர்வாகிகளும் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாநில நிர்வாகி ஆறுமுகம் வரவேற்றார்.
கொடைக்கானல் செய்தியாளர்கள் தேவா, சகாதேவன், மாதவன், செந்தில், இம்மானுவேல், அனீஸ், தனபாலன், லெலின் சுந்தர், நவீன், ரமேஷ், புகைப்படக்கலைஞர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.