சாதனை மங்கை உமாதேவி
சாதனை மங்கை உமாதேவி தென்மாவட்டங்களில் இவரின் பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம், பாரம்பரியம் மிக்க ஜெயவிலாஸ் குடும்பத்தின் அங்கமான இவர் பெரும் சாதனை மங்கையாக வெற்றி வலம் வருகிறார், இவர் பல நிறுவனங்களுக்கு இயக்குனராகவும் இருக்கிறார், தனது மாவட்டத்தில் பலருக்கு தனது நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார், மேலும் பல ஆதரவற்ற பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட அயராது பாடுபடுகிறார், தான் செய்யும் தர்மம் வெளியில் தெரிவதையும் மற்றும் அதை வைத்து விளம்பரம் தேடுவதையும் சற்றும் விரும்பாத இவர் சிறந்த வீரமங்கை திருமதி. உமாதேவி அவர்கள் என புகழாரம் சூட்டலாம்.
இவரை சந்திக்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் மிகவும் எளிமையாகவும், அன்பாகவும் சிரித்த முகத்துடனே பேசுகிறார். அனைத்து தரப்பு மக்களிடமும் உயர்வு தாழ்வு இன்றி பேசி உண்மையாக பழகும் உயர்ந்த உள்ளம் படைத்தவர், இவர் ஹோம் சயின்ஸ் பட்டதாரி ஆவார், இவரின் உயர்ந்த சிந்தனை மற்றும் சமூக அக்கறையை அறிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இவருக்கு தனது கட்சியில் மாநில அந்தஸ்தில் பொறுப்புகளை வழங்கி கௌரவித்துள்ளது கூடுதல் சிறப்பு .
இதுகுறித்து நமது பத்திரிகையின் சார்பாக நேர்காணல் செய்தபோது நடைபெற்ற உரையாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கேள்வி : தங்கள் வெற்றிக்கு யார் காரணம்?
திருமதி உமாதேவி அவர்கள் பதில்: எனது கணவர் மற்றும் எனது மகனும் தான் காரணம் பிரச்சனைகள் குறித்து பேசும்போது என்னை தடுக்க மாட்டார்கள் , நமது ஊர் மற்றும் மக்களுக்காக நாம் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்று கூறி உற்சாகப் படுத்துவார்கள், என தெரிவித்து பெருமிதம் கொள்கிறார்
கேள்வி: திடீரென அரசியலுக்கு வர காரணம் என்ன?
திருமதி உமாதேவி அவர்கள் பதில் : நான் அரசியலுக்காக வரவில்லை , என் மக்களுக்கு நன்மை செய்ய வந்துள்ளேன், அதற்காக அரசியலின் பயணிக்கிறேன் என் மனதில் ஏற்பட்ட சமூக வழிகள் மற்றும் பெண்களின் வேதனைகள் அதற்கான மாற்றங்கள் குறித்து எங்கள் தலைவர் திரு கமலஹாசன் அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் என் சமூக அக்கறையை தன் கருத்தில் கொண்டு எனக்கு இந்த கௌரவத்தை வழங்கினார் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்தார் சற்றும் நான் இதை எதிர்பார்க்கவில்லை , அதற்காக எங்கள் தலைவரிடம் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
கேள்வி : உங்களின் எதிர்கால திட்டங்கள் என்ன?
(என்று நாங்கள் கேட்டபோது அவர் பல திட்டங்களை புள்ளிவிவர அடிப்படையில் தெரிவித்தது எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது, அவற்றின் விரிவாக்கம் இனி வரும் வாரங்களில் வெளியிடப்படும் தற்போது அவற்றின் சுருக்கம் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
- பெண்கல்வி
- பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு உடனடித் தீர்வு
3 ஏழைகள் துயர் நீக்கும் திட்டம்
4 பாலர் காவல் பயிற்சி
5 கணினி பயிற்சியில் குற்றங்களை தடுக்கும் திறன் மற்றும் மனதளவில் பயிற்சி
என 20 விதமான திட்டங்களை கூறினார் அதுமட்டுமின்றி இவைகள் அனைத்தும் இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்து பல இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு சப்தமின்றி உதவி செய்து பலரின் வாழ்க்கையை உயர்த்தியுள்ளார்,
(இது குறித்து எங்கள் பத்திரிக்கை சிறப்பு குழு கள ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்களை இனி வரும் வாரங்களில் வெளியிடப்படும்) இவரின் சேவைகள் தன்னலமின்றி இருப்பதால் பத்திரிக்கையின் சார்பாக பாராட்டுகிறோம்,
தொடரும்.,,,,,
த.விஜய் பாண்டியன்