திருக்குறள்
பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
(குறள் எண்:0599)
மு.வ உரை:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
திண்டுக்கல் ஷாஜஹான் உரை:
உருவத்தை விட ஊக்கமே பெரிது என்பதற்கான எடுத்துகாட்டு;
யானை, பெரிய உடம்பு, பெரிய தந்தம் மற்றும் கூர்மையான கொம்பு கொண்டிருந்தாலும், ஊக்கமுடைய புலி தாக்குதலைக் கண்டு
பயந்து நடுங்கும்.
திருக்குறள் பரப்புரைஞர்
அ.ஷாஜஹான்
அரசுப்பள்ளி ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம்