இறைவன் அளித்த மங்கல அடையாளம்

திலகமிடுவதன் சிறப்பு இந்து மதத்திற்கே உரிய இறைவன் அளித்த மங்கல அடையாளம்.
வேறு மதங்களில் இப்படியோர் சிறப்பு இருப்பதாக தெரியவில்லை…!
அப்படிப்பட்ட மங்கல அடையாளம் கொண்ட மகிமைகளை தற்கால இந்து பெண்கள் அல்லது இளம் யுவதிகள் கடைபிடிப்பது மிகக் குறைவு. இது வேதனைக்குரிய விடயமாகும்.இதன் பாரிய பொறுப்பு தாய்மார்களுக்கே உரியது.பொட்டு வைப்பதை அநாகரிகமாக சிலர் அல்ல பலர் கருதுகின்றனர்.பூவும் பொட்டும் நமது மதத்தின் இரு கண்கள் போல.இது இல்லாவிட்டால் குருடு என அர்த்தம் கொள்க.நவீன காலத்து இந்துப் பெண்கள் அணியும் ஆடைகள் ஏற்புடையதாக இல்லை. கலாசார சீரழிவிற்கே இது வழிகோலுகின்றது.எனவே இதை ஓர் சிறு விடயமாக எடுத்துக் கொள்ளாமல் உங்கள் பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே மத கோட்பாடுகளின் சிறப்புகளை எடுத்துரைத்து சீர் செய்யுங்கள்.
உலகத்திற்கே புனிதம் நிறைந்த நாகரிகத்தின் தொன்மை இந்து நாகரிகமே…!
நாம் ஒவ்வொருவரும் இந்துவாக பிறக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை மறந்து விட கூடாது…!
Sgs