ம.ஜ.க. செங்கை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்.
ம.ஜ.க. செங்கை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு..மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்கல்பட்டு வடக்கு மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் ஆலந்தூரில் மாவட்டச்செயலாளர் அல்தாப் தலைமையில் நடைபெற்றது நிகழ்வுக்கு மாவட்ட பொருளாளர் ஆலந்தூர் சலீம் முன்னிலை வகித்தார் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பளாராக மஜக மாநிலபொருளார் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்று திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை 2021
சட்டசபை தேர்தலில்வெற்றி பெற செய்ய மஜகவினர் பம்பரம் போல் சுழன்று பணி யாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர்N.A. தைமிய்யா மாநில துணைச்செயலாளரும் செங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமானபல்லாவரம் ஷஃபி மற்றும் மாநிலத்துணைச்செயலாளர் நாகை முபாரக் மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன் ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்தும் பிரச்சார வியூகங்கள் குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர்.மாவட்டதுணைச் செயலாளர்கள் தாம்பரம் .ஜாகிர்.தில்ஷாத்.இ.சி.ஆர். அப்துல் சமது.பல்லாவரம் அஜிஸ் மற்றும் மாவட்ட இளைஞர அணி செயலாளர் ஃபாருக் மரைக்கார்
பைசூல்ல பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ் ஆலந்தூர் நகர செயலாளர் அமீன் அனகபுத்தூர் நகர செயலாளர் சலீம்.
சோழிங்கநல்லூர் நகர செயலாளர் சமது உள்ளிட்ட மாவட்ட .நகர.கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்.M.G. தமீம் அன்சாரி
தமிழ் மலர் மின்னிதழ்.