வாழும் வள்ளுவன்
இன்றும் வாழும் வள்ளுவன் _ ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்(பு) உடைத்து.
(குறள் எண்:0126)
மு.வ உரை:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
திண்டுக்கல் அ.ஷாஜஹான் உரை:
தன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழும் ஆமையைப்போல, தனது ஐம்புலன்களின் (மெய், வாய், கண், மூக்கு, செவி) வழியாக வெளிப்படும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி வாழ்பவனாக இருந்தால், அதுவே அவன் பல தலைமுறைகள் வாழ்வதற்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
திருக்குறள் பரப்புரைஞர் அ.ஷாஜஹான்,
அரசுப்பள்ளி ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டம்