வாழும் வள்ளுவன்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(குறள் எண்:948)

மு.வ உரை:

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

திண்டுக்கல் ஷாஜஹான் உரை:

நோயாளிக்கு வந்த நோய் என்ன? அது வந்ததற்கான காரணம் என்ன? அதை தீர்க்கும் வழி என்ன? என்பதையும் ஆராய்ந்து மருத்துவர்கள் செயல்பட வேண்டும்

திருக்குறள் பரப்புரைஞர் திண்டுக்கல்
அ.ஷாஜஹான்
அரசுப்பள்ளி ஆசிரியர்