ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது, இன்னும் தமிழகத்தில் உள்ள இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக, கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை

இந்த நிலையில் தற்போது கூட்டணி தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது

இதுவரை அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

திமுக கூட்டணியில்?

தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,

மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்,

மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள்,

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்,

மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்,

அதிமுக கூட்டணியில் ?

தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்,

பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள்

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்