நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 41

கசப்பு சுவை கொண்ட கம்பு என்ற சிறு தானியம் தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று….! கடந்த 40 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது.

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, உடல் எடையைப் பராமரிக்க உதவும். மேலும் இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கம்புவில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள்

கம்புவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள லிக்னன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட், குடலில் மமாலியன் லிக்னனான மாற்றப்பட்டு, மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். அதாவது இது இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் கம்பு தீவிரமான ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.

கம்புவில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது செரிமான செயல்பாட்டை தாமதப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடித்தால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் ஒரு கப் கம்மங்கூழைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

கம்புவில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம். எனவே நீங்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தால், தினமும் காலையில் கம்மங்கூழைக் குடித்து வாருங்கள்.

கம்புவில் கால்சியம் சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனை உண்பவர்களுக்கு இவ்வனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

கம்பு உணவுகளில் அதிக அளவு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது.வளரும் குழைந்தைகள் கம்பு உணவினை உண்டு வந்தால் அவர்களின் வளர்ச்சியானது மிகவும் சீராக அமையும்.

கம்பில் உள்ள இரும்புச்சத்துக்கள் இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் இவர்களின் உடல் சூடானது தனியும். எனவே குளிர்ச்சியான உடலினை பெற கம்பங்கூழினை பருகுங்கள் நண்பர்களே.

கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து  உடல் எடை குறையும்.

கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.உ

உயர்இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. காம்பில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு மலசிக்கல் போன்ற பிரச்சினை வராமல் முற்றிலுமாக தடுக்கின்றது.

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை னாய் ஏற்படாமல் காக்க உதவும்.எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் நீங்கள் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்…!

நோய் வரும்முன் காப்பதற்கு மிகச்சறந்த உணவு வகைகளில் கம்பும் ஒன்று…

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119