நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 40

 

சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்ததும் அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடியுங்கள்.

உடலில் உள்ள காயங்களில் பாக்டீரியாக்கள் அல்லது இதர கிருமிகளின் பெருக்கத்தைத் தடுக்க வேப்பிலை உதவும். அதற்கு சிறிது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் காயம் உள்ள பகுதியைக் கழுவுங்கள். இதனால் வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டிரியல் பண்புகள், காயங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கும்.

வேப்பிலையில் கசப்புச் சுவையைத் தவிர, அதில் உள்ள பல்வேறு முக்கியமான மருத்துவ பண்புகள் கல்லீரல் நோய்கள் மற்றும் ஹெபடைடிஸ் பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

வேப்பிலையில் அசிடிராச்சின், ஆக்ஸிடூரனோ, அசிடிக் அமிலம் மற்றும் க்ளிசெர்டா எண்ணெய் போன்றவை உள்ளது. இந்த உட்பொருட்கள் ஆன்டி-பைரிடிக் மற்றும் ஆன்டி-ருமாடிஸ் ஆகும். இவை கீல் வாத நோயில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு வேப்பிலை கொழுந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஒரு மாதம் முயற்சித்து தான் பாருங்களேன்.

இரத்தத்தில் வெள்ளையணுக்களின் அளவு அதிகமாக இருந்தால் ஏற்படும் பிரச்சனை தான் லுகேமியா. இந்த பிரச்சனைக்கு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் 3 வேளை குடித்து வர நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், லுகேமியாவில் இருந்து நல்ல தீர்வு கிடைத்திருப்பதை காண முடியும்.

மூளைக்கு சீரான அளவில் இரத்த ஓட்டம் இல்லாத போது வரும் நிலை தான் பக்கவாதம். இதற்கு கால்சியம் உடலில் அதிகளவில் இருப்பது தான் காரணம். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு பரிவத்தனை சரியாக நடைபெறுகிறது என்று அர்த்தம். எனவே பக்கவாத பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் சிறிது வேப்பிலையை சாப்பிடுங்கள்.

பக்கவாதம் போன்றது தான் கரோனரி இதய நோயும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான் கரோனரி இரத்த நோயால் பாதிக்கப்படுவார்கள். உடல் பருமன் உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.

நமது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், வேப்பிலையை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதும். எவ்வித கிருமிகளும் உடலைத் தாக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியா பண்புகள், சரும பிரச்சனைகளான எக்ஸிமா, ஸ்கேபீஸ் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். அதற்கு வேப்பிலை போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரால், சருமத்தைக் கழுவ வேண்டும். இதனால் விரைவில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சமீபத்திய ஆராய்ச்சியில் வேப்பிலை புற்றுநோயை சரிசெய்ய பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் தான், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

உலகிலேயே எய்ட்ஸ் மிகவும் மோசமான நோய். தற்போதைய தொழில்நுட்பம் இந்த அபாயகரமான நோயைத் தடுக்க பல்வேறு வழிகளைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் வேப்பிலை கொண்டு சரிசெய்வது. வேப்பிலையில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் எய்ட்ஸ் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது. அதிலும் வேப்பிலையில் உள்ள அசாடிராசிடின், வைரஸை அழிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த நச்சுப் பொருளாகும். ஆகவே தினமும் வேப்பிலை சாப்பிட்டால், எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கலாம்..

தெய்வீக மூலிகையான வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்து அதை துறையோடு பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்…

நோய் வருமுன் காப்போம்..

நல்ல (உணவு) மருந்து….!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:-சங்கரமூர்த்தி… 7373141119