அ.தி.மு.க விருப்ப மனு
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
மாலை 5 மணியுடன் விருப்ப மனு தாக்கலுக்கான நேரம் நிறைவடைந்த நிலையில் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 8,241 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கட்சி ரீதியான அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஒரேகட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
செய்தி ரசூல்
தமிழ்மலர் மின்னிதழ்