பவானி வட்டார மக்களுக்கு தடுப்பூசி

பவானி வட்டார மக்களின் கவனத்திற்கு ❗️

கடந்த ஓராண்டாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக நமது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து தற்பொழுது தான் பழைய நிலைமைக்கு திருப்பி உள்ளோம்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் ( சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதர நாள்பட்ட நோய்கள் ) உள்ளவர்கள் பாதிப்படைந்து , சில உயிரிழப்புகளும் நேர்ந்தது.

தற்போது கொரோனா நோய் தொற்று நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.எனவே கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நமது சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

முதல்கட்டமாக

❗️60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,
❗️45 வயதுக்கு மேல் மற்றும் இணை நோய்உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது

▪️இடம் – பவானி அரசு மருத்துவமனை.

▪️நாள்: 01/03/2021 முதல் தொடர்ச்சியாக

▪️நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

▪️கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் – ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை

▪️செலவினம்: அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை

( தனியார் மருத்துவமனையில் ரூ.250 செலுத்த வேண்டும்)

நன்றி

*தலைமை மருத்துவ அலுவலர் * அரசு மருத்துவமனை
பவானி.

செய்தியாளர் வீரராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்