“உலகம் சுற்றும் வாலிபன் ” வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றது.

மக்கள் திலகம் எம்ஜியார் சொந்தமாக தயாரித்து நடித்து இயக்கிய,இமாலய வெற்றி படமான “உலகம் சுற்றும் வாலிபன் “
வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றது.
மிகுந்த பொருட்செலவில் ஜப்பான்,தாய்லாந்த்,சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளில் படப்பிடிப்பு செய்து அக்காலத்தில் பிரமாண்டமாக உருவான படம் “உலகம் சுற்றும் வாலிபன்”.இப்படத்தில் கவியரசு கண்ணதாசன்,வாலி,புலமைப்பித்தன்,வேதா
போன்ற கவிஞர்கள் பாடல்களை புனைந்துள்ளனர்.தமிழகத்தின் அனைத்து முன்னணி பாடகர்களுக்கும் இப்படத்தில் எம்ஜியார் வாய்ப்பளித்தார்.சீர்காழி கோவிந்தராஜன்,டி.எம்.சௌந்தரராஜன்,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,
கே.ஜே.ஜேசுதாஸ்,பி.சுசீலா,எல்.ஆர். ஈஷ்வரி,எஸ்.ஜானகி போன்றோர் இப்படத்திற்கு பின்னணி பாடியுள்ளனர். சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”என்ற பாடல் எழுத்தோட்டத்தில் சேர்க்கப்பட்டது.பின்னாளில் எம்ஜியாரின் அதிமுக கட்சியின் பிரச்சார பாடலாக இது அமைந்தது.இப்படத்தில் கவிஞர் வாலிக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு இல்லை.இருந்தாலும்
படத்தின் தலைப்பில் உலகம் சுற்றும் “வாலி”பன் என தான் இருப்பதாக வாலி கூறவே,எம்ஜியார் புன்னகையுடன் வாய்ப்பளித்தார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள். படத்தின் கதையமைப்பின்படி
எம். எஸ் .விஸ்வநாதனை கொண்டு இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என கவியரசு கண்ணதாசன் கூறவே,எம்ஜியாரும் எம்.எஸ்.விஸ்வநாதனையே இசையமைக்கச் செய்தார்.பின் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு தான் நடித்த “நவரத்தினம்”படத்தில் வாய்ப்பு வழங்கினார். இப்படம் வெளிவருவதற்கு கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் ஏகப்பட்ட தடைகள் நடந்தன. விளம்பரங்கள் கிழிக்கப்பட்டன.பெரிய அளவில் விளம்பரங்கள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டாவிடினும்
“உலகம் சுற்றும் வாலிபன்”பல தடைகளையும்  தாண்டி இமாலய வெற்றி பெற்றது. இலங்கையிலும் 200 நாட்களுக்கு மேல் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.இப்படம் உருவாவதற்கு எம்ஜியாரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி மற்றும் எம்ஜியாரின் ஆஸ்தான இயக்குனர் ப. மக்கள் திலகம் எம்ஜியார் சொந்தமாக தயாரித்து நடித்து இயக்கிய,இமாலய வெற்றி படமான “உலகம் சுற்றும் வாலிபன் “
வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றது.
மிகுந்த பொருட்செலவில் ஜப்பான்,தாய்லாந்த்,சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளில் படப்பிடிப்பு செய்து அக்காலத்தில் பிரமாண்டமாக உருவான படம் “உலகம் சுற்றும் வாலிபன்”.இப்படத்தில் கவியரசு கண்ணதாசன்,வாலி,புலமைப்பித்தன்,வேதா
போன்ற கவிஞர்கள் பாடல்களை புனைந்துள்ளனர்.தமிழகத்தின் அனைத்து முன்னணி பாடகர்களுக்கும் இப்படத்தில் எம்ஜியார் வாய்ப்பளித்தார்.சீர்காழி கோவிந்தராஜன்,டி.எம்.சௌந்தரராஜன்,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,
கே.ஜே.ஜேசுதாஸ்,பி.சுசீலா,எல்.ஆர். ஈஷ்வரி,எஸ்.ஜானகி போன்றோர் இப்படத்திற்கு பின்னணி பாடியுள்ளனர். சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”என்ற பாடல் எழுத்தோட்டத்தில் சேர்க்கப்பட்டது.பின்னாளில் எம்ஜியாரின் அதிமுக கட்சியின் பிரச்சார பாடலாக இது அமைந்தது.இப்படத்தில் கவிஞர் வாலிக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு இல்லை.இருந்தாலும்
படத்தின் தலைப்பில் உலகம் சுற்றும் “வாலி”பன் என தான் இருப்பதாக வாலி கூறவே,எம்ஜியார் புன்னகையுடன் வாய்ப்பளித்தார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள். படத்தின் கதையமைப்பின்படி
எம். எஸ் .விஸ்வநாதனை கொண்டு இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என கவியரசு கண்ணதாசன் கூறவே,எம்ஜியாரும் எம்.எஸ்.விஸ்வநாதனையே இசையமைக்கச் செய்தார்.பின் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு தான் நடித்த “நவரத்தினம்”படத்தில் வாய்ப்பு வழங்கினார். இப்படம் வெளிவருவதற்கு கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் ஏகப்பட்ட தடைகள் நடந்தன. விளம்பரங்கள் கிழிக்கப்பட்டன.பெரிய அளவில் விளம்பரங்கள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டாவிடினும்
“உலகம் சுற்றும் வாலிபன்”பல தடைகளையும்  தாண்டி இமாலய வெற்றி பெற்றது. இலங்கையிலும் 200 நாட்களுக்கு மேல் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.இப்படம் உருவாவதற்கு எம்ஜியாரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி மற்றும் எம்ஜியாரின் ஆஸ்தான இயக்குனர் ப. நீலகண்டனும் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். இப்படத்தின் வெள்ளிவிழா வின் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் திலகம் எம்ஜியாரின் திறமையை வெகுவாக புகழ்ந்திருந்தார். இந்நிகழ்வு எம்ஜியார் ரசிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது.   கொழும்பு “கெப்பிட்டல்”திரையரங்கில் கூட்ட நெரிசலில் டிக்கட் கிடைக்காத ஓர் சூழலில் வாக்குவாதம் முற்றி திரையரங்கின் ஊழியர்
ஒருவர் கொலையும் செய்யப்பட்டார்.இப்படத்தில் எம்ஜியாரும்,நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஜப்பானில் இருக்கும் புத்தக்கோயில் போல் சென்னையில் செட் போட்டு நூற்றுக்கணக்கான புத்தர்
சிலைகளை அடுக்கி வைக்கப்பட்டு
படப்பிடிப்பு செய்யப்பட்டது.ஜப்பானில் நடைபெறும் “எக்ஸ்போ 70″நிகழ்வுகளை அருமையாக படப்பிடிப்பு செய்திருப்பார்
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி. “உலகம் சுற்றும் வாலிபன் “
எம்ஜியாருக்கு வரலாற்றுப் புகழை தேடிக்கொடுத்த உனனத படைப்பாகும். இதன் இரண்டாம் பாகமாக
“கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு” என்ற படம் தயாரிக்கும் நிலையில் இருந்தாலூம் என்ன
காரணத்தினாலோ பின்னர் கைவிடப்பட்டது
(Sgs) பெரிதும் உறுதுணையாக இருந்தனர். இப்படத்தின் வெள்ளிவிழா வின் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் திலகம் எம்ஜியாரின் திறமையை வெகுவாக புகழ்ந்திருந்தார். இந்நிகழ்வு எம்ஜியார் ரசிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது.   கொழும்பு “கெப்பிட்டல்”திரையரங்கில் கூட்ட நெரிசலில் டிக்கட் கிடைக்காத ஓர் சூழலில் வாக்குவாதம் முற்றி திரையரங்கின் ஊழியர்

(Sgs)