விஜயகாந்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. தமாகா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று முதல் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்கியது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி
கே. பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர்.
அதே சமயம் அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது கூட்டணி ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்துள்ளனர். மிக விரைவில் கூட்டணி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்