எம்.எல்.ஏ. அலுவலகங்களை பூட்டிச் சீல் வைக்கவேண்டும்!

தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலில் உள்ளதால் எம்.எல்.ஏ அலுவலகங்களை பூட்டிச் சீல் வைக்கவேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.
திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளதால் எம்.எல்.ஏக்களின் அதிகாரம் முடிவடைவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே எம்.எல்.ஏ அலுவலகங்களை பூட்டிச் சீல் வைக்கவேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எம்.எல்.ஏக்களின் பொருட்கள் கோப்புகள் அலுவலகத்தில் இருந்தால் அதை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்