தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.

தமிழகம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகார் தேர்தலில் பல பாடங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது; பீகார் மாநில தேர்தல் அதிகாரிகளை இந்த தருணத்தில் மனதார பாராட்டுகிறேன். விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன எனவும் சுனில் அரோரா தெரிவித்தார்.

அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வழங்கிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் தேர்தல். கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்படும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக அலோக் வர்தன் நியமனம்; காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம். வேட்புமனு தாக்கலில் வேட்பாளருடன் இருவருக்கு மட்டுமே அனுமதி. 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக பார்க்கிறோம். தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமித்துள்ளோம் என தலைமை தேர்தல் சுனில் அரோரா தெரிவித்தார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்