மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-3-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை, கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்