சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் வேண்டுகோள்.
பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, அரசுப்பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா. சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவு செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள் எனவும், பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, நிலுவையில் வழங்காமல் உள்ள பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழகம் முழுவதும் இன்று அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
அரசுப்பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நாளையும் தொடரும் எனத் தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், தமிழக அரசு உடனடியாகப் போக்குவரத்து ஊழியர்களை அழைத்துப்பேசி சுமூக தீர்வு காண வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்