இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் – அபூர்வ ராகங்கள்

1975 இல் இயக்குனர் சிகரம்
கே.பாலச்சந்தர் அவர்களின் மனோரத  ராகங்களால் உருவான “அபூர்வராகங்கள்”
வெற்றிப்படத்தில் இடம்பெற்ற “அதிசய ராகம்”என்ற பாடல்  உருவான விதம்….

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு நாள் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள்
“அபூர்வராகங்கள் “என்ற தலைப்பில்  ஒரு படம் எடுக்கின்றேன் என ஒரு பாடலுக்கான
காட்சியை விபரித்து விட்டு,பாடலில் வரும் ராகம் அபூர்வமாக இருக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார்.இப்படி ஒரு ராகத்திற்கு நான் எங்கு போய் யாரைக்கேட்பேன் என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அப்போது  அவ்வழியே வந்து ,என்ன விசு கடுமையாக யோசனையில் இருக்கிற மாதிரி தெரியறது என்ன விடயம் என கேட்க,அதற்கு எம்.எஸ்.வி
விடயத்தை கூறவே உடனே பாலமுரளி கிருஷ்ணா நாலு ஸ்வரம் சேர்ந்து வர்ற மாதிரி “மஹதி”ராகத்தில் அமைத்து விடு என்றார்.இது நல்ல யோசனை என கவியரசு கண்ணதாசனிடம் கூற ,அவரும் இப்பாடலின் காட்சியின் விபரத்தையும், நடிக்கும் நாயகி பாத்திரத்தின் பெயர் “பைரவி”என்பதை  மட்டும் உள்வாங்கி கொண்டு  உடனே “அதிசய ராகம் ஆனந்த ராகம் என “மஹதி” ராகத்தில் ஒரு பாடலை எழுதினார்.இதன் கடைசி நான்கு வரிகளான
“ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி”என பைரவி ராகத்தில் இருக்குமாறு எழுதிக் கொடுத்தார்.
கவியரசு கண்ணதாசன்,எம்.எஸ்.வி,இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மூன்று கலை இமயங்களின்
ரசனையையும்,ஒரு பாடலுக்கான இவர்களது உழைப்பையும்,ஞானத்தையும்
என்னவென்று பாராட்டுவது..
இப்படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும்
“அபூர்வ ராகங்களே”
(Sgs)

செய்தி விக்னேஸ்வரன்