நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

1956.02.25 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,நாட்டியப்பேரொளி பத்மினி நடிப்பில்,கலைஞர் கருணாநிதி வசனத்தில்,ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான “ராஜா ராணி “திரைப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகள் ஆகின்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் இலக்கிய நயம் மிக்க வசனங்களுக்கு உயிரூட்டி நடமாட விட்டிருப்பார்.இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு ஓரங்க நாடகங்கள் இப்படத்தின் வெற்றிக்கு துணையீட்டின.
சாக்ரடீஸ்,சேரன் செங்குட்டுவன் போன்ற நாடகங்களில் வசனம் அனல் பறக்கும்.
சேரன் செங்குட்டுவன் நாடகத்தில் “காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களமமைத்த சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்து கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென இன்று போல் அன்றும் போர்த்தொடுத்துக் கொண்டிருந்த காலமது”,என கலைஞர் கருணாநிதி அரை மணிநேரத்தில் எழுதிக் கொடுத்த, சுமார் இருபது நிமிடங்கள் வரை அடங்கிய நீண்ட வசனங்கள் அமைந்த இக்காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரே தடவையில்
(One take _ no retake) 836 அடியில் படச்சுருளை விரயம் செய்யாது நடித்து பேசி அசத்தியிருப்பார். இது ஓர் உலக சாதனை. எந்தவொரு ஹொலிவூட் நடிகர்கூட செய்ய இயலாத,செய்ய முடியாத அசாத்திய சாதனை.மேலும் இப்படத்தில் கவிஞர் ஏ.மருதகாசி எழுதி என்.எஸ்.கிருஷ்ணன் ,டீ.ஏ.மதுரம் பாடும் “சிரிப்பு இதன் சிறப்பை சீர் தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு”என்ற நகைச்சுவை பாடல்,
இப்படி ஒரு பாடல் உலகில் வேறு எந்த மொழிப்படத்திலும் இடம்பெற்றதாக சரித்திரம் இல்லை. இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு நாடகமான சாக்ரடீஸில் சிவாஜி கணேசனின் நடிப்பு அலாதியானது.உண்மையான தத்துவஞானி சாக்ரடீஸை நம் கண் முன் நிறுத்திய பெருமை இம் மகா கலைஞனையே சாரும்.
இனியெந்த யுகத்திலும் காண முடியாத நடிப்பின் மறுபிறவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
(Sgs)