தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி உத்தரவு.

புதுச்சேரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டை வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஆய்வு செய்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், “மத்திய அரசு நிதி உதவியுடன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தரப்படுகிறது.

அக்குழந்தைகளின் புரதச் சத்துத் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது.

இனி வாரம் மூன்று முட்டைகள் தர உத்தரவிடப்படுகிறது. அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதனால் 28 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். இதற்காகப் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.68 கோடி கூடுதல் செலவாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்