கே.கே.முத்துச்சாமி – மனக்குமுறல்

காவல் துறையில் நேர்மையாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி கே.கே. முத்துச்சாமி அண்ணன் அவர்களின் மனக்குமுறல் பதிவு இது…!

அரசு அலுவலர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்1)நேர்மையும் திறமையும் உடையவர் 2)நேர்மை உடைய திறமையற்றவர் 3) திறமையுள்ள நேர்மையற்றவர் 4) நேர்மை,திறமை இரண்டுமே இல்லாதவர்.நேர்மையும் திறமையும் உடையவர் மனிதாபிமானமும் கொண்டவர் என்றால் அவர் கடவுளுக்குச் சமமானவர்.இவர்கள் முதல் ரகத்திற்கும் மேற்பட்டவர்கள்.இதற்கு உதாரணமாகச் திகழ்பவர்கள் சிலர் இருந்தார்கள், இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவர் நீதிபதி திரு.K.E.வரதன் அவர்கள். தன் மூன்று குழந்தைகளைக் கொலைசெய்து தானும் தற்கொலைக்கு முயற்சித்த ஒரு பெண்ணை விடுதலை செய்து மறு வாழ்வளிக்க எண்ணி, நான் அப்பீலுக்குப் போகக் கூடாது என்று வேண்டுதல் தொணியில் சிங்காநல்லூர் ஆய்வாளரான என் சம்மதம் கேட்டு விடுதலை செய்தது பற்றி முன்பே பதி விட்டுள்ளேன்.நான் V& AC யில் பணிபுரிந்து வந்தபோது ஒரு எஸ்.பி.மீது வந்த ஊழல் புகார் பற்றி ரகசிய விசாரணை ( confidential enquiry– C E)நடத்தி அறிக்கை அனுப்பப் பணிக்கப்பட்டேன்.அவர்,பணவரவுள்ள மது விலக்கு, போக்கு வரத்து,சட்டம் ஒழுங்கு போன்ற பிரிவுகளில் வேலை செய்யும் P.C, H.C.களைத்திடீரென குற்றப்பிரிவு,குற்றஆவணப்பிரிவு, சிறார் கடத்தல் தடுக்கும் பிரிவு என வருமாணமில்லாப் பதவிக்கு மாற்றுவாராம்.பிறகு அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கேட்கும் இடங்களுக்கு மாறுதல் போடுவாராம்.அப்படி மாற்றப்பட்டு, மீண்டும் அதே பதவிக்கு ஓரிரு நாளில் மாற்றப்பட்டோரின் கோப்புகளை வாங்கி சம்பந்தப்பட்ட காவலர், தலைமைக் காவலர்கள் பலரை விசாரித்தும் ஒருவர்கூட பணம் கொடுத்தது பற்றிக்கூற மறுத்து விட்டனர்.ஆதாயம் பெற்றவரிடம் உண்மையை வரவழைக்கமுடியாதென்பது உண்மையே.குற்றச்சாட்டு உண்மை, ஆனால் ஆதாரமில்லை.இருந்தாலும் “his reputation at — is at its low ebb என்ற முடிவறிக்கையின் பேரில் அவர் மாற்றப்பட்டார்.நாலைந்து நாட்களுக்கு முன் தமிழ் நாட்டில் 54 IPS அதிகாரிகள் மாற்றப்பட்டு இரண்டு மூன்று நாட்களிலேயே சிலர் பழைய இடத்திற்கே மாறுதல் பெற்றுவிட்டனராம்.இதுவும் ,எஸ்.பி யின் செயலும் ஒன்று போலத்தான் என்று அவசரமுடிவிற்கு வந்து விடவேண்டாம்.இதுவேறு அது வேறு.தன் கீழ் வேலை செய்வோரிடமே லஞ்சம் பெறுவது என்பது, தான் பெற்ற மகளையே கற்பழிப்பதற்குச் சமம் என்பது என் கருத்து.


தொகுப்பு:- சங்கரமூர்த்தி