புதுச்சேரி முதல்வர் அமைச்சரவை ராஜினாமா…

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நேற்று கவிழ்ந்ததை அடுத்து அவர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பியிருந்த நிலையில் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட அமைச்சரவை ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஏற்றுக் கொண்டார் என்றும் இதனை அடுத்து அடுத்த கட்ட அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

புதுவையில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டதால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,