இரும்புப் பெண்மணி ஜெயலலிதா 73 வது ஜனன தினம்

தமிழக முன்னாள் முதல்வரும் ,புரட்சித்தலைவியும்,தமிழக மக்களின் இதயதெய்வமுமான இரும்புப்
பெண்மணி “அம்மா”என்ற மூன்றெழுத்து
தாரக மந்திரச் சொல்லுக்கு  உரித்தானவருமான ஜெயராம் “ஜெயலலிதா “அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்.
ஜெயராம் ,வேதவல்லி என்ற இணையருக்கு இரண்டாவது பெண் குழந்தையாக கர்நாடக மாநிலம் மைசூரில் மாண்டியா மாவட்டத்தில் 1948.02.24 அன்று  பிறந்தார் கோமளவல்லி என்ற அம்மு..
இவர்கள் குடும்பம் மைசூர் சமஸ்தானத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இருந்தனர்.தனது இரண்டு வயதுக்குள் தந்தையை பறிகொடுத்தார் அம்மு.அம்முவின்
தந்தை ஜெயராம் நிறைய சொத்துக்களை வீண் செய்ததால் தாயின் அரவணைப்பில் பெங்களூருக்கு குடும்பத்துடன் குடியேறி விட்டனர்.அங்கு பிஷப் கல்லூரியில் அம்முவை சேர்த்து விட்டனர்.கல்வி,கலை,விளையாட்டு  மற்றும் அனைத்து வகையறாக்களிலும்
அம்மு கெட்டிக்காரி.அத்துடன் சிறுவயதிலே அதிக துணிச்சலுடனும்,துடிப்புடனும் காணப்பட்டார் அம்மு.அந்நேரத்தில்
வேதவல்லியின் தங்கை அம்புஜா விமானப் பணிப்பெண்ணாக இருந்து
பின் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார்.அக்கா வேதவல்லி வறுமைமையில் இருப்பதாக அறிந்து சென்னைக்கு அழைத்து வேதவல்லியைசினிமாவில் நடிக்க வைத்து பேருதவியாற்றினார் அம்புஜா.சினிமாவுக்காக தனது பெயரை “சந்தியா”என மாற்றிக்கொண்டார்.இருப்பினும் வாங்கிய  கடன்களை அடைக்க முடியாமல் இருந்த சூழலில் அம்முவை சினிமாவில் நடிக்க வைக்கும் எண்ணம் சந்தியாவுக்கு தோன்றிற்று.ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க அம்முவுக்கு நாட்டமில்லை.சிறந்ததோர் வக்கீலாக வரவேண்டுமென கனவு கண்டவர்அம்மு.இருப்பினும் குடும்ப சூழ்நிலை கருதி நடிக்க  சம்மதித்தார்.அம்மு. இவர் நடித்த முதல்  (1964) திரைப்படம் “எபிசில்”என்ற ஆங்கிலப்படமாகும் முதல் படத்திலேயேஆங்கில உச்சரிப்பில் பின்னியெடுத்தார்
அம்மு. பின் அதே ஆண்டில் “சின்னடா கொம்பே”என்ற கன்னடப்படத்திலும் நடித்தார்.தமிழில் இவர் நடித்த முதல் படம் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை “இப்படத்தில்தான் கோமளவல்லி அம்முவை “ஜெயலலிதா “என தமிழ் சினிமா ஆரவாரத்துடன் அணைத்துக் கொண்டது.”வெண்ணிற ஆடை “அமோக வெற்றி கண்டது. இந்நேரத்தில் தான் அதிர்ஸ்டம் ஜெயலலிதாவை வீடு தேடி வந்து கதவைத் தட்டியது. தமிழ்த்திரையின் வசூல் மன்னனும்,புரட்சி நடிகருமான மக்கள் திலகம் எம்ஜிஆருடன் “ஆயிரத்தில் ஒருவன்”பிரம்மாண்ட படைப்பில் எம்ஜிஆருக்கு ஜோடியாக அறிமுமாகிபெரும் வரவேற்பைப் பெற்றார் ஜெயலலிதா. அது வரை எம்ஜிஆரின் ஆஸ்தான நாயகியாக கன்னடத்துப்பைங்கிளி என பெயர் பெற்ற சரோஜாதேவி விளங்கினார்.ஜெயலலிதா எம்ஜிஆர் ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடரச்சியாக இந்த ஜோடி 28 படங்களில் நடித்தது.இதில் பல படங்கள் வெள்ளி விழா கண்டது.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு  “மோட்டார் சுந்தரம் பிள்ளை “படத்தில் முதலில் மகளாக நடித்தார்.பின் “கலாட்டா கல்யாணம் “படத்தில் இருவரும் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி, என பல மொழிப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்த பெருமைஇவருக்குண்டு.இவர் நடித்த மொத்த படங்கள் 115 . இவரின் 100 வது படம் “திருமாங்கல்யம்”.கடைசிப்படம். “நதியைத் தேடி வந்த கடல்”தனது 22 வயதில் தாய் சந்தியாவை பறிகொடுத்து தனிமையில் துவண்டு போனார் ஜெயலலிதா. அந்த நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவருக்கு பெருத்துணையாகவிருந்தார்.மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாபெரும் சக்தி ஜெயலலிதாவுக்கு ஓர் மாபெரும் அரணாக அமைந்தது.மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிப் படைப்பாகிய “உலகம் சுற்றும் வாலிபன் “படப்பிடிப்பின் போது எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடுகள் தோன்றிய தருணம்.அப்படதில் இவருக்கு பதில் மஞ்சுளா நடித்தார். இப்படத்தில் தான் லதா அறிமுகமானார். அப்போது 
எம்ஜியார் திமுக வை விட்டு விலகி அதிமுக என்ற கட்சியை உருவாக்கினார்.அந்நேரத்தில் தான் சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா பெரிய பங்களா கட்டி அதற்கு ”வேதா நிலையம்”என்ற தனது தாயாரின் பெயரையும் வைத்தார்.
அதிமுகவின் வளர்ச்சி தமிழகத்தில் வேரூன்றி தளைக்கத் தொடங்கிய காலங்களில் மக்கள் திலகம் ஜெயலலிதாவுடன் சமரசமாகி கட்சியின் முக்கிய பொறுப்புக்களை வழங்கினார். இது  ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களுக்கு சற்று வயிற்றெரிச்சலாக இருந்தது.பின் நாளில் இக்காழ்ப்புணர்வே அதிமுக எம்ஜியார் மறைவுக்குப் பின் பிளவு படக்காரணமாக அமைந்தது.
எம்ஜியார் ரசிகர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற  ஓர் விழாவில் மக்கள் திலகத்திற்கு ஆறடி உயரத்தில் வெள்ளிச்செங்கோல் ஒன்றை பரிசாக வழங்கினார் ஜெயலலிதா. இவரின் 100 படமான “திருமாங்கல்யம்”வெற்றி விழாவில் கலைஞர் கருணாநிதி,இவருக்கு ,
“நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா”என புகழாரம் சூட்டினார். பின்னாளில் இருவரும் அரசியலில் ஜென்மப் பகையை வளர்த்து கொண்டனர்.ஒரு தடவை ஜெயலலிதாவை எம்ஜியார் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமராக இருந்த இந்திகாந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நடைபெற்ற ஒர் அரசியல் கூட்டத்தில் ஜெயலலிதா ஆங்கிலத்தில் சரமாரியாக உரையாற்றினார். அவரது புலமை மிக்க ஆங்கில பேச்சைக்கேட்டு இந்திராகாந்தி ஜெயலலிதாவை வெகுவாக பாராட்டியதுடன்,எம்ஜியாரிடம் இவர் சாதாரணமானவரல்ல எதிர்காலத்தில் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர் என அப்போதே ஆரூடம் கூறினார். பின்னாளில் அவரது வாக்கு பலித்தது. தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம்,மலையாளம்,ஹிந்தி,கன்னடம் ,டச் ,பிஃரெஞ்ச் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் மிகவும் நெருக்கமாகி திருமணம் வரை சென்ற போது எம்ஜியார் தடை போட்டதாக ஒரு தகவலும் உண்டு. சினிமாவில் எம்ஜியார் படங்கள் தவிர  தனது பாத்திரத்துக்கு அழுத்தம் தரும் கதையமைப்பு கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பதை பெரிதும் கவனத்தில் கொள்வார்.”வெண்ணிற ஆடை “குமரிப்பெண்”சவாலே சமாளி””ஆதிபராசக்தி “சூரியகாந்தி “”திருமாங்கல்யம் “கங்கா கௌரி” “வந்தாலே மகராசி”பட்டிக்காடா பட்டணமா”என சில படங்களைக் குறிப்பிடலாம்.சிறந்த ஓர் நடன தாரகை ஜெயலலிதா. பரதம்,குச்சிப்புடி,மேல்நாட்டு நடனம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்.தன் 12 வது வயதிலேயே நாட்டியத்தில் அரங்கேற்றம் கண்டவர்.அத்துடன் சிறந்த பாடகி.அடிமைப்பெண்,சூரியகாந்தி,அன்பைத்தேடி,திருமாங்கல்யம்,போன்ற படங்களில் பாடியுள்ளார்….
மக்கள் திலகம் திலகத்தின் மறைவுக்குப் பின் அதிமுக அழிந்து விடும் என திமுக வினர் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
வீரப்பன் போன்றவர்களால் அதிமுக பிளவுபட்டது. எம்ஜியாரின் மனைவி ஜானகியை தலைமை கொண்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.ஜானகிக்கு இதில் பெரிதும் ஆர்வமிருக்கவில்லை ஜெயலலிதாவுக்கு வேண்டாதவர்களின்
வற்புறுத்தலுக்காக சிறிது காலம் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார்.பின் ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தால் கட்சி ஒன்றிணைந்தது .இரட்டை இலை சின்னமும் தக்க வைக்கப்பட்டது. 1989 இல் கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை நிகழ்த்தியபோது நடைபெற்ற கலவரத்தில் ஜெயலலிதா மீது செருப்பு வீசப்பட்டும் சேலைத்தலைப்பை இழுத்தும்
அவமதிக்கப்பட்டார்.அப்போது கண்ணியமில்லாத இச்சட்டசபையில் இனிமேல் பாதம் பதிக்க மாட்டேன் எனவும்,மீண்டும் வந்தால் ஓர் உயர்ந்த நிலையுடன் தான் வருவேன் என சபதமேற்றார்.பின் அதிமுக கட்சியினை ஒருங்கிணைத்து தனது கட்டுப்பாட்டில்
வைத்திருந்த ஜெயலலிதா 1991 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 43 வது வயதில் இந்திய சரித்திரம் வியக்கும் வண்ணம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.அந்நேரத்தில் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்புச் சம்பவம்
ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்தது எனலாம்.இவர்ஆட்சியில் சிறப்பான கல்வித்திட்டம்,மழைநீர் சேகரிப்பு திட்டம்,
தொட்டில் குழந்தை திட்டம்,காவிரி பிரச்சனையை மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது,அதனை
அரசிதழில் வெளியிடச் செய்தமை, இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும்அ திட்டம் போன்றன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை இந்திய அரசியலில் புகழ்மிக்க ஆற்றல்கொண்ட ஜெயலலிதாவின் வாழ்வில் விதி மன்னார்குடி ஊரிலிருந்து கிளம்பியது.ஓர் சாதாரண வீடியோ கேசட் கடை நடத்திக்கொண்டிருந்த சசிகலா என்ற வடிவில் போயஸ் தோட்டத்தில் நுழைந்தது அந்த விதி.படக் கெசட்டுக்களை வழங்கியவாறே ஜெயலலிதாவுடன் இணைபிரியா தோழியானார் சசிகலா. பின்னாளில் ஜெயலலிதா மறைந்த பின் அதிமுகவை ஆட்டி வைத்தது மட்டுமன்றி அனைத்து வகையறாக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.தற்போதைய தமிழ் நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட இவரிடம் பூச்சியைப்போல் ஊர்ந்து சென்று காலில் விழுந்து வணங்கியது குறிப்பிடத்தக்கது.
சசிகலா வருகைக்கு பின் போயஸ் கார்டன் வழமைக்கு மாறாக இருந்தது ,சசிகலாவின் ஆதிக்கத்திற்கு
ஆளானதை பின்னர்தான் ஜெயலலிதா அறிந்து கொண்டார்.அதன்பின் ஜெயலலிதா மீது அடுக்கடுக்கான வழக்குகள்..சொத்து குவிப்பு,பிளசன்ட் ஸ்ட்டே ஹோட்டல்,கொடநாடு,டான்சி நிலம் என பல்வேறு வேறு வழக்குகளில்
பெங்களூரு பார்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று சில வருடம் சிறைவாசம் அனுபவித்து மீண்டும் அப்பீல் செய்து விடுதலை அடைந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்து தமிழக அரசியல் களம் கண்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் இவரை இரும்புப் பெண்மணி என வர்ணித்தது
ஆயிரம் “நோபல்”விருதுகளை வழங்கியதற்கு சமமாக அமைந்தது. தனது அரசியல் பரம விரோதியான
கலைஞர் கருணாநிதியை ஒரு நாளேனும் தனது ஆட்சியில் சிறையில் தள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும்
ஈடேற்றிகொண்டார்.பயம் என்றால் என்னவென்பது ஜெயலலிதா ஜாதகத்தில் கூட இல்லை. ஒரு படப்பிடிப்பின் போது அங்கு வந்து  படமெடுத்து ஆடிய நாகப்பாம்பை ஒரே கரத்தால் எடுத்து தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. பின்னாளில் இத்தகவலைச் சொன்னவர் மக்கள் திலகம் எம்ஜியாரின் ஆஸ்தான ஒப்பனையாளரும்,இயக்குனர் பி.வாசுவின் தந்தையாருமான திரு.பீதாம்பரம் அவர்கள். இவரதுஅரசியல் ஆலோசகராக இருந்த நடிகர், பத்திரிக்கையாளர் ,எந்த நாட்டிலும் அமையாத அரசியல் விமர்சகர்  என பன்முகத்துறைகளில் ஆற்றல் கொண்ட “சோ”என்ற ராமசாமி மீது அலாதி பிரியம் கொண்டவர் ஜெயலலிதா.ஜெயலலிதா  இறந்த விடயம் சோவிற்கு  தெரியாது, சோ இறந்த விபரம் ஜெயலலிதாவுக்கு தெரியாது .இருவரும்  கோமா நிலையில்
இருந்ததே இதற்கு காரணம். சோ இறந்தது 2016.டிசம்பர் 07.அம்மா இறந்தது 2016.டிசம்பர் 05.இதுவும் காலம் செய்த கோலம் என்றுதான்  மொழிய வேண்டும்.  அண்ணா,எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துடன் “அம்மா”என்ற மூன்றெழுத்துக்கும் வித்திட்டவர் ஜெயலலிதா.2016 செப்டம்பர் 22 அன்று எதிர்பாராத உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் 05 ஆம் திகதி அமரரானார் ஜெயலலிதா. அவர் இருக்கும் வரை துள்ளாத சிலர் இப்போது  கட்சி அமைத்து வேடிக்கை புரிகின்றனர். அண்ணா எம்ஜியார் வரிசையில் ஜெயலலிதா சாதனை புரிந்து தமிழக மக்கள் இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது நிதர்சனமான வரலாற்று உண்மை..
ஜெயலலிதா அம்மையார் போன்ற துணிச்சல் மிக்க பெண்மணி இனி ஒரு போதும் இம்மண்ணில் தோன்றுவது இறைவன் செயல்.
“வாழ்க அம்மா புகழ் இவ்வையம் உள்ளவரை”
(ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை)

இரும்புப் பெண்மணி
” ஜெயராம் ஜெயலலிதா “அவர்களின் 73 வது ஜனன தினம் இன்று (24.02.2021).
இந்தியப் பிரதமராவதற்கான எல்லா ஆற்றல்களும் நிறைந்தவரென அரசியல் விமர்சகர்களால் எதிர்வு கூறப்பட்ட ஒரே தமிழகத் தலைவர்…
இவர் இல்லாத வெற்றிடம் இன்னும் பூர்த்தி காணாமல் உள்ளது. எத்தனை பேர் வரினும்
அத்தனை பேரும் “அம்மையார்”போல் வராது.பேனாமுனையில்,நாவாற்றல் நிறை ஆற்றலில் தமிழக அரசியலை கோலோச்சிய கலைஞர் கருணாநிதி என்ற ஆண் சிங்கத்தையே மிரள வைத்த பெண் சிங்கம்
“ஜெயராம் ஜெயலலிதா “
(Sgs)