தமிழகம் முழுவதும் வாகன சோதனை!

தமிழக மாநில எல்லைகளில் இன்று நள்ளிரவு முதல் தீவிர வாகன சோதனை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார்.

அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதைத் தடுக்க தமிழக மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கடும் சோதனை நடத்தப்படும். ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் எட்டு வழிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர் என கூறியுள்ளது.

s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,