சூரியன் சந்திரனின் முக்கியத்துவம்

ஜோதிடத்தில் சூரிய உதயம் முக்கியமானதாகும்.
எல்லாச் சுபகாரியங்களும் சூரிய
உதயத்திற்குப்பிறகுதான்
செய்யப்படும்.

அதுவும் சூரிய உதயம் காலை
6.00 மணிக்கு என்றால் அந்த நேரம் துவங்கி மதியம் 12 மணிக்குள்
வளர் சூரியனில் முடித்துக்
கொண்டு விடுவார்கள்.
அந்த 6 முதல் 12 மணிக்குள்
உள்ள 6 மணி நேர காலத்தில் கூட ராகுகாலம் அல்லது எமகண்டம் (கேதுவிற்குரியது) இல்லாத
நேரத்தில்தான்
செய்வார்கள். இது
காலங்காலமாக உள்ளது.

பகல் நேரத்திற்குக் கொடுக்கும் முன்னுரிமையை, சூரிய
அஸ்தமனத்திற்குப் பிறகு வரும்
12 மணி நேரத்திற்கு
யாரும் கொடுப்பதில்லை.

அதுபோல வார நாட்களில், செவ்வாய்கிழமையையும்,
சனிக்கிழமையையும் தவிர்த்து விடுவார்கள்.

அந்த இரு கிழமைகளில் திருமண வைபவங்களை நடத்த மாட்டார்கள்.

நமது நடைமுறை வழக்கங்களில் சூரியனுக்கு அவ்வளவு
முன்னுரிமை உள்ளது.

எல்லாக் கோள்களிலும் பிரதானக் கோள் சூரியன்தான்.

ஜாதக நிர்ணயத்தில் சூரியன் தந்தைக்கு உரிய கிரகம். ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால்தான்
அந்தக் குழந்தைக்குத் தன் தந்தையின்
அரவணைப்பும், ஆதரவும் கிடைக்கும்.

தந்தையால் குழந்தை பெருமை
பெரும். குழந்தையின்
ஜாதகத்தில் சூரியன் 6, 8, 12 ஆகியஇடங்களில்
மறைந்து விட்டால் அல்லது நீசமடைந்திருந்தால் அந்தக்
குழந்தைக்குத் தந்தை இறந்திருப்பார்
அல்லது இருந்தாலும்
அந்தக் குழந்தையை நன்றாக
வளர்கக்கூடிய நிலையில்
இல்லாமல் இருப்பார்.

அதுபோல சூரியனுக்கு இன்னொரு ஆதிபத்யமும் உண்டு சூரியன் உடல் காரகன். ஒருவன் நல்ல
உடல்வாகோடு இருக்க வேண்டுமென்றாலும், ஜாதகத்தில்
சூரியன் வலுவாக இருக்க வேண்டும்.

அதுபோல சந்திரன் தாய்க்குரிய கிரகம். சந்திரனை
வைத்துத்தான் ஒரு குழந்தையின் தாயைப்பற்றிச் சொல்வார்கள்.
சந்திரன் மனதிற்கும் உரிய கிரகம். சந்திரன் ஜாதகத்தில்
வலுவாக இருந்தால்தான் மனம் தெளிவாக இருக்கும்.
சந்திரன் வேறு தீய கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது
ஜாதகத்தில் மறைந்திருந்தாலும், குழப்பமான மனநிலை
உள்ளவராக இருப்பார்.

ஜோதிட ஆய்வில்
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்