கர்நாடகத்தில் நாளை முதல் எல்லைகள் மூடுவதாக அரசு அறிவிப்பு.

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் தலபாடி, சரத்கா, நெட்டானிகே-முத்நுரு, ஜல்சூர் ஆகிய நான்கு எல்லைகளை தவிர்த்து, மற்ற அனைத்து எல்லைகளையும் மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தெரிவித்துள்ளது

S.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,