தமிழ்த்தாத்தா- உ.வே.சாமிநாத அய்யர்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் 166வது ஜனன தினம் (19.02.2021). தமிழுக்காக உயிர் கொடுத்தோர் வரிசையில் திரு.சாமிநாத ஐயர் அவர்கள் சிறப்புக்குரியவர்.இவர் இல்லையெனில் சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற காவியங்கள் மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கும். இது போன்ற பல ஓலைச்சுவடிகளை தேடியெடுத்து நூலுருவில் நூற்றுக்கணக்கான பல பதிப்புகளை இவ்வுலகத்தின் பார்வைக்கு கொண்டு சேர்த்து தமிழ் வரலாற்று காவியங்களுக்கு ஒளி கொடுத்தவர்

திரு.உ.வே.சா.அவர்கள். இவ்வரிய கைங்கரியத்திற்காக தன் சொத்து முழுவதையும் இழந்தார்.தன் வாழ்நாளின் பெரும் பகுதியை இப்புனித சேவைக்காக அர்ப்பணித்த தமிழாய்ந்த மகான் என இவரைப் போற்றினால் மிகையாகாது.
இவரது சரித்திரப் புகழ் பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டியது.தமிழகத்தில் பல நகரங்களில் அன்னாருக்கு சிலை எழுப்பி
சிறப்பான கௌரவம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தாத்தாவின் நினைவினை எந்நாளும் போற்றுவோமாக…
(Sgs)

தகவல் விக்னேஸ்வரன்