சாலை விழிப்புணர்வு பேரணி
காங்கேயம் காவல் துறை சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், இதில் சாலை விதிகளை பின்பற்றுதல், தலை கவசம் அணிதல் உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றன. இப்பேராணியை காங்கேயம் அணைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலக்ஷ்மி, மற்றும் காங்கேயம் காவல் துறை துணை ஆய்வாளர் திரு. மகுடஸ்வரன் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.
செய்தியாளர் சந்தோஷ், மங்கலம்
தமிழ் மலர் மின்னிதழ்