தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு! ஊரடங்கு நேரத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் ரத்து ?

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும், மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகள் திறப்பு, விளையாட்டு மைதானங்கள், திரையரங்கு திறப்பு, அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு என்று பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிறக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்க் அணிவது உள்ளிட்ட பிரிவுகளில் பதிவான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம், கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு மீறியதாக தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்