தமிழகத்தில் எமதர்மராஜ பகவானுக்கென தனியாக சந்நிதானம்

தமிழகத்தில் எமதர்மராஜ பகவானுக்கென தனியாக சந்நிதானம் அமைந்த ஆலயம், திருச்சிராப்பள்ளியிலிருந்து 27 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள “திருப்பைஞ்சீலி”எனும் ஷேத்திரத்தில் அமைந்துள்ளது.இவ்வாலயம் “ஞீலிவனேஷ்வரர்” என்ற திருநாமம் கொண்டது.இவ்வாலயத்தின் மூலவர்களாக “ஸ்ரீ தாட்சாயணி சமேத ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜயர்” அருள் பாலிக்கின்றனர்.திருக்கடையூரில் சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமதர்மராஜனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதே பதவியையும்,அதிகாரத்தையும் வழங்கியதாக தலபுராணம் விபரிக்கின்றது.
எனவே இத்திருத்தலத்தில் எமதர்மனுக்கு “அதிகார வல்லவர்”என்ற திருநாமத்துடன் கூடிய தனிச்சந்நிதானம் உள்ளது. வாழ்வில் இழந்தவைகளை மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய தோஷ வழிபாடுகளை மேற்கொண்டு சிறப்பு நிறைந்த பெருவாழ்வு காண இச்சந்நிதானத்தில் வீற்றிருக்கும் மூலமூர்த்திகளை தரிசனம் செய்வதினால்
நிவர்த்தி காணலாம்.மேலும் இவ்வாலயத்தில் 60 ஆம் ஆண்டு (ஷஷ்டியப்த பூர்த்தி),70ஆம் ஆண்டு (பீமரதஷாந்தி),80ம் ஆண்டு (சதாபிஷேகம்) போன்ற ஆயுள்நிறை வழிபாடுகளை செய்யலாம்…

(Sgs)

தகவல் – விக்னேஸ்வரன்