கருணை அடிப்படையில் தூய்மை பணி

தென்காசி- ராஜபாளையம் பகுதியில் நகராட்சியில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் பணியின் போது மரணமடைந்ததால் அவரது மகள் முத்துமாரிக்கு கருணை அடிப்படையில் தூய்மை பணிக்கான ஆணையை ஆணையாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேலாளர் பொறுப்பு முகம்மது யூசுப், பொறியாளர் ஜெபசிங், உதவி பொறியாளர் முரளி, உதவியாளர் அல்லி பாத்திமா பங்கேற்றனர். தூய்மை பணிக்கான ஆணையை பெற்றுக்கொண்ட முத்துமாரி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் – செய்யது அலி.