நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 29

 பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

இதில் மருத்துவக்குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன,அதுபோல அறுசுவைகளும் இந்தக் கீரையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது..!

பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி ஒரு ஈரப்பாங்கான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காகப் பயிரிடப்படுகிறது.

உடல் எடை குறைய பொன்னாங்கன்னி கீரை.

 பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

பொன்னாங்கன்னி கீரை உடல் எடையை அதிகரிக்க மட்டுமில்லாமல் கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது பொன்னாங்கண்ணி கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும்.எலும்புகள் உறுதியாகும்.

வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்..

பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.

பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.

பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.

இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.

பொன்னாங்கன்னி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்த கீரையை சாப்பிட்டால் அழகு மேம்படும்.

சுத்த சைவ உணவு வகைகளில் முதலிடத்தைப் பிடிப்பது கீரை வகைகளே..

அப்படிப்பட்ட கீரை வகைகளில் முருங்கைக்கீரையை போன்ற சுவைமிக்க கீரைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையும் ஒன்று.

பொன்னாங்கண்ணி கீரையில் பலவிதமான ரெசிப்பிகள் செய்வார்கள்.

குறிப்பாக பொன்னாங்கண்ணி கீரை பொரியல் பொன்னாங்கண்ணி பருப்பு கூட்டு மேலும் பொன்னாங்கண்ணி சூப் இப்படி பழைய வகையான ரெசிபிகள் உண்டு.

கீரைகளில் நிறைந்துள்ள சத்துக்களை நாம் புரிந்துகொண்டு நோய் வருமுன் காக்க கீரைகளை முக்கியமாக எடுத்துக் கொள்வோமாக…

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து….!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 737314111