தமிழகத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் திடீர் மாற்றம்!
சென்னையை தவிர மற்ற ஏழு போக்குவரத்துக் கழகங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி வருகின்றன.
நாடு முழுவதும் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி வைத்தார். பாஸ்டேக் மின்னணு மூலம் சுலபமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் பாஸ்டேக் திட்டத்திற்கு மாறியுள்ளனர்.
மேலும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது இப்பொழுது கொரோன பாதிப்பு காரணமாக பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. பேருந்துகளும் பாஸ்டேக் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழகங்கள் உள்ளன .அதில் சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் தவிர மற்ற ஏழு போக்குவரத்துக் கழகங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி பேருந்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் இத்திட்டத்தின்கீழ் அமைக்கபட்டுள்ளது. இந்த பாஸ்டேக் திட்டத்தில் தொகைகள் மாத அடிப்படையில் கணக்கிட்டு மொத்தமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
தனியார் போக்குவரத்து கழகங்களும் இதனை பின்பற்றி பேருந்துகளை இயக்கி வருகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 3000 பஸ்கள் இருக்கின்றன இவற்றில் 2,500 பஸ்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பேருந்து சுங்கச்சாவடியை எத்தனை முறை கடந்து செல்கிறது என்பதை வைத்து இந்த தொகை கணக்கிடப்பட்டு வருகிறது என்று அதிகாரி கூறியுள்ளார். தனியார் வாகனங்களை போலவே அரசு வாகனங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது .
அரசு பஸ்களுக்கு என எந்த சலுகைகளும் பாஸ்டேக் திட்டத்தில் வழங்கப்படவில்லை. ஒரு பேருந்து மாதத்திற்கு 60 ட்ரிப் சுங்கச்சாவடியை கடக்கிறது என்றால் 50 ட்ரிப்புக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பாஸ்ட்ராக் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்தினால் அரசு பஸ்கள் சுங்கச்சாவடிகளில் காத்து இருக்க வேண்டியதில்லாமல் எளிதாக கடந்து செல்கிறது. விழுப்புரம் போக்குவரத்து கழகம் ஐசிஐசிஐ வங்கி மூலம் பாஸ்டேக் கட்டணத்தை செலுத்தி வருகிறது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்