கலப்பு திருமண சலுகைகள்:

அரசாணை எண்.477 சமூக நலத்துறை நாள்:27.6.75 மற்றும் அரசாணை எண்.1907 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்:29.9.89 ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி கீழ்க்காணும் வகுப்புகளிடையே நடைபெறும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  1. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் – முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம்.
  2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் – பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம்.

3.தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் – மிகபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும இடையே நடைபெறும் திருமணம்.

  1. முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் – பிற்படுத்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம்.

மேற்குறிப்பிடப்பட்ட வகையிலான திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களின் ஒருவரது சாதியில் ஏதேனும் ஒரு சாதியை குறிப்பிட்டு சாதி சான்று பெற இயலும். இவர்களில் தந்தையின் சாதி அல்லது தாயாரின் சாதி இதில் எதனை அனுசரிக்க வேண்டுமென பெற்றோர்கள் தீர்மானித்து உறுதிமொழி அளிக்கிறார்களோ அந்த சாதியினையே கணக்கிற்கொண்டு சாதி சான்று வழங்கிடலாம். ஒரு குழந்தைக்கு நிர்ணயிக்கும் சாதி தான் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்.
(அரசாணை எண் 477 சமூக நலத்துறை நாள்:27.6.75) அரசாணை எண் 2டி எண்.17 ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை நாள்:16.8.94)

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம் கலப்பு திருமணமாகக் கொள்ள கூடாது. மேற்படி சலுகை இவ்வினத்திற்கு பொருந்தாது.
(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கடித எண்.1418/பிநசீமி 2001 நாள்:21.5.2001)

மேலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பழங்குடியினர் / தாழ்த்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற சாதி அடிப்படையில் வருவதாலும் மேற்கண்ட நான்கு இனத்தின் கீழ் செய்யப்படும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்பதனாலும் மதங்களின் அடிப்படையில் செய்யப்படும் திருமணங்கள் கலப்பு திருமணங்கள் என கொள்ள இயலாது.(சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை கடித நிலை எண்.235 நாள்:27.7.97)

திருமணம் புரிந்து கொள்ளும் ஆண் / பெண் இருவரில் ஒருவர் பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் ளுஊ/ளுவு வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் பொருட்டு இத்திருமணம் கலப்பு திருமணமாக கருதப்படும்.(அரசாணை எண்.939 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறைநாள்:24.9.86)

தகவல் – செந்தில்நாதன்