அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்!

தமிழகத்தில் 16வது சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். அதேசமயம் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. அதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் தேமுதிக தரப்பில் 40 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், இந்தமுறை தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 14 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

விருகம்பாக்கம்
எழும்பூர்
கொளத்தூர்
ராணிப்பேட்டை
விருதாச்சலம்
ரிஷிவந்தியம்
திருவெறும்பூர்
கடையநல்லூர்
கள்ளக்குறிச்சி
திருப்பரங்குன்றம்
வால்குடி
ஆத்தூர்
தாராபுரம்
திருச்சுழி,ஆகிய தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்