சென்னையின் 2வது விமான நிலையம் திட்டம்

சென்னையின் 2வது விமான நிலையம் திட்டம் எப்போது, எங்கே அமையும் என்று நீண்ட காலமாக நிச்சயமில்லாமல் இருந்து வந்த நிலையில், சென்னை 2வது விமான நிலையம் பற்றி முதல்வர் எடப்பாடி
K. பழனிசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தொழில்துறை கொள்கையில் சூசகமாக தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையம் ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று புதிய தொழிற்கொள்கை கூறுகிறது.

சென்னையின் 2வது விமான நிலையம் எங்கே அமைப்பது என்பதை இறுதி செய்ய தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்காக மாநில அரசு இன்னும் காத்திருக்கிறது என்பதால் இந்த அறிவிப்பு வந்திப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம், தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்ட பிறகு, காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் 4,500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைக்க அதிகாரிகள் இறுதி செய்ய வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான நோடல் ஏஜென்சியான தமிழ்நாடு அரசு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதற்கும், சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவதற்கும், ஏல நடவடிக்கையை நடத்துவதற்கும் ஆலோசகரை முடிவு செய்ய உள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்