மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
சென்னையில் பேருந்துகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை விட்டு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் பேருந்துகள் பிரேக் டவுன் ஆனாலோ, விபத்து ஏற்பட்டாலோ பேருந்தில் இருக்கும் ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தை விட்டு விட்டுச் செல்லக்கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. எந்த சூழலிலும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரிடம் தெரிவித்து, பேருந்திற்கு மாற்று பணியாளர்கள் வந்த பிறகு பேருந்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்