சாதனை படைக்கும் முன்னணி TCCL நிறுவனம்
சென்னை மேயர்.சத்தியமூர்த்திரோடு சேத்பட்
TCOA சங்கத்தின் வெகுநாள் கனவான சொந்த கட்டிடம்15.02.2021 திங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. சொந்த கட்டிடத்தில் TCOA வின் மாநிலத் தலைமை அலுவலக திறப்பு விழா நிறுவனர் P.சகிலன் அவர்களின் திருக்கரங்களால் TCOA மாநில தலைமை அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் வட சென்னை,தென் சென்னை,மத்திய சென்னை,சென்னை புறநகர்,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டனர். எளிமையாக இந்த விழாவை நடத்துவது என்று முடிவெடுத்து சிறப்பு செய்தனர்.
TCCL – 9 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த விழாவில் நிர்வாக தலைவர் அவர்கள் கேக் வெட்டினார். தலைவருக்கு ஆப்பரேட்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
இந்த வெற்றி பயணம் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஆபரேட்டர்களையும் உள்ளடக்கி தற்சமயம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்களை ஆபரேட்டர்களுக்கு வழங்கி இந்தியாவிலேயே முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது
இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம், ஆபரேட்டர்கள் TCCL ல் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையே காரணம் என்பது இவர்களது வெற்றியில் தெரிகிறது
தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்
R முகிலன்.